No results found

    தூர்வாரும் பணியால் நொய்யல் ஆற்று நீராதாரம் தடையின்றி கிடைக்க வாய்ப்பு


    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குள் நொய்யல் ஆறு கடந்து செல்கிறது. நொய்யல் ஆற்றுக்கு ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம், சபரி ஓடை, மந்திரி வாய்க்கால் ஆகியவற்றின் வழியாக நீர் வந்து சேர்கிறது. இதில் ஜம்மனை ஓடை மங்கலம் ரோட்டிலும், சபரி ஓடை காங்கயம் ரோட்டிலும், சங்கிலிப்பள்ளம் தாராபுரம் ரோடு மற்றும் காங்கயம் ரோட்டிலும் கடந்து சென்று நொய்யல் ஆற்றில் சேர்கிறது. தற்போது தென் மேற்கு பருவ மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் இந்த ஓடைகள் வாயிலாக நொய்யலுக்கு நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக தற்போது மண் மேடுகளும், முட்செடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கும் ஓடைகளை தூர்வாரி நீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.சங்கிலிப் பள்ளம் ஓடையில் நிரம்பியுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இப்பணியில் எந்திர வாகனம் மூலம் தூர்வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    Previous Next

    نموذج الاتصال